Saturday, 18 August 2012

Swami Vivekananda's 150th Jayanthi

Swami Vivekananda's 150th Jayanthi is going to be celebrated from Jan12,2013 to Jan12,2014.
His thought provoking  and inspiring message should be conveyed to millions and millions of
people all over Bharat   Every one should feel proud to be instrumental in this mission. 
 

Friday, 17 August 2012

ஒரு கொசுவின் கதை



ஒரு கொசுவின் கதை
டாக்டர்  கே .கே.சாமி

ஒ மனிதர்களே!  புத்தர் முதல் வள்ளலார் வரை ஜீவகாருண்யத்தை பற்றி நிறையவே பேசியிருக்கிறார்கள். இருப்பினும் , இரக்கமின்றி
எங்களை வேண்டாவெறுப்புடன் ஊதாசீனபடுதுகிறீகளே, இது நியாயந்தானா ?
ரத்ததானத்தைபற்றி வாய்கிழிய பேசுகிறீர்கள் .ஒரு சொட்டு ரத்தம் எடுக்கும் எங்களை அடித்து விரட்டுகிறீர்களே,      இது நியாயந்தானா ?
ஆண் கொசுக்கள் தாவரங்களின்சாற்றை மட்டும் உறுஞ்சி வாழ்கின்றன .முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் பென்கொசுக்கள் ரத்தத்தை  உறுஞ்சவேண்டி உள்ளது . ரத்தத்தை உறுஞ்சும் முன்பு உங்கள் காதோரம் இனிமையாக பாடி,மென்மையாகவே சிறிதளவு ரத்தத்தை உறுஞ்சுகிறோம்.ஆனால்,கொசு கடித்துவிட்டது என்று புலம்புகிறீர்களே, இது நியாயந்தானா ?   
மலேரியா ,டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் கொசுவின் மூலம் பரவுகின்றன.வருடந்தோறும்   மூன்று மில்லியன்   
பேர் மாண்டுபோகிறார்கள் என்றெல்லாம் கணக்கிடுகிறீர்கள் . ஆனால் உண்மை  என்ன? ஒரு கொசு நோயாளியை கடிக்கும் பொழுது அவன் ரத்தத்திலுள்ள  நோய்கிருமிகள்  கொசுவிடம் வருகின்றன. ரத்தம்
 உறையாமலிருக்க, மற்றொரு மனிதனை நாங்கள் கடிக்கும் பொழுது சலவாய் மூலம்   நோய்கிருமிகள்    அம்மனிதனின் உடலில் செல்கிறது. நோய் பரவுவதற்கு யார் காரணம்? நோயுற்ற  மனிதன்தானே? அப்படியிருக்க, கொசுவை குறைசொல்கிறீர்கள் ,  
 இது நியாயந்தானா ?
நாடுமுழுவதும் நீக்கமற வியாபிதுள்ளோம் அரிதாக தென்படும் மயிலை தேசியபறவையாக்கி, கொசுவினமாகிய  எங்களை  தேசிய பறவையாக்கவில்லை,     இது நியாயந்தானா ?

அண்மையில் நடந்த உள்ளாச்சி தேர்தலில் ,"என்னை மேயராக தேர்ந்தெடுத்தால்  கொசுவை ஒழிப்பேன் "
என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார்கள் .எங்குபார்த்தாலும் குப்பைகூளங்கள் ,சாக்கடை ,தேங்கிய நீர்நிலைகள் என மாசுநிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்கும் நீங்களா எங்களை ஒழிக்கபோகிறீர்கள்?
உங்களிடம் அறியாமை  சமுதாய பொறுப்பின்மை ,பொது சுகாதார அக்கறையின்மை ஆகியவை  இருக்கும்வரை மாசற்ற சுற்றுச்சூழலை  உங்களால் உருவாக்க முடியாது என்பது  எங்களுக்கு நன்றாக
தெரியும் .

கொசுவை ஒழிக்க டி டி ட்டி என்ற மருந்தை பயன்படுத்தினீர்கள் . என்ன ஆயிற்று? அந்த மருந்தை நாங்கள்  ஒழித்துவிட்டோம் அல்லவா?

இஸ்லாம் பயங்கரவாதம் ,நக்சலிசம் ,மாவோயிசம்  போன்ற தீய சக்திகளையும் ,2 ஜி  போன்ற    ஊழல்  பிரச்சனைகளையும் ஒழிக்க இயலாத மனிதர்களே , நீங்களா எங்களை  ஒழிக்க போகிறீர்கள்?

 கொசுவிடமிருந்து தப்பிக்க இரு நண்பர்கள்  நான்காம் மாடிக்கு தூங்க சென்றார்கள் திடீரென்று ஒருவன் கதறினான்
“:டேய் ,கொசு டார்ச் லைட் அடித்துக்கொண்டு நம்மை கடிக்கவருது”.
நண்பன் கூறினான் :”மடையா,அது கொசுவல்ல ,மின்மினி பூச்சு !”

இப்படி மிரண்டுபோய் கிடக்கும் மனிதர்களே ! நீங்களா எங்களை அழிக்கபோகிறீர்கள்?

 
கொசுமட்டைகொண்டு எங்களை பந்தாட முற்படினும்,  கொசுவலைக்குள் புகுந்து  ஒளிந்துகொள்ள முயன்றிடினும்   கோழை மனிதர்களே , எங்களை   நீங்கள் அழித்துவிட முடியாது !
வெளியில் உலாவிவிட்டு வீடு திரும்பிய குட்டிகொசுவிடம்  தந்தைகொசு கேட்டது : கண்ணு ,அனுபவம் எப்படி?
சட்டென குட்டிகொசு கூறியது :  அப்பா , அருமையான வரவேற்பு ,சென்ற இடமெல்லாம் சிறப்பான கைதட்டல் !
 இத்தகைய தன்னம்பிக்கை நிறைந்த எங்கள் கொசு இனமா ?
மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழும் மனித இனமா ?
வெற்றி யார் பக்கம், ஒரு கை பார்ப்போம்!